65 Views
இரண்டாவது பாதியில் போட்டியின் போக்கு மாறியது. 59 ஆவது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் ஷா சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய இந்திய அணியின் சுஹைல் அகமது பட் 60ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.
போட்டியின் 88ஆவது நிமிடத்தில் சந்தீப் மண்டி கோல் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் தெற்காசிய கால்பந்து championship வரலாற்றில் 10ஆவது முறையாகக் கிண்ணத்தை வென்ற இந்தியா, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் champion பட்டத்தைத் தக்கவைத்துச் சாதனை படைத்துள்ளது.