ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஓம். இத்திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓம் திரைப்படத்திற்கு தற்போது UA சான்றிதழும் கிடைத்துள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி ஓம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் முன்பதிவில் இதுவரை இத்திரைப்படம் இந்தியப்பெறுமதிப்படி 4கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.