இவ்வாண்டில் வெளியான தனது 3 திரைப்படங்களும் வெற்றி பெற்றதை எண்ணி நடிகர் சூர்யா பெரு மகிழ்ச்சியில் உள்ளார்.
அந்த மகிழ்ச்சியை 'சீன்' திரைப்படக் குழுவினருடன் பகிர்ந்திருக்கிறார் நடிகர் சூர்யா. தீபாவளியை முன்னிட்டு கடந்த 6ஆம் திகதி வெளியான 'சீன்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
எனவே, 'சீன்' திரைப்பட வெற்றியைக் கொண்டாடும் விதமாக சூர்யா ஜோதிகா ஜோடி 'சீன்' திரைப்படக் குழுவினர் எல்லோரையும் அழைத்து, பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கிய கௌரவித்திருக்கிறார்கள்.