வீடுகளில் அத்தியாவசிய மின்சாதனமாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்படும் சில கோளாறுகள் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, மின் கசிவு, மின் இணைப்பில் ஏற்படும் குறுக்குச் சுற்று, குளிர்பதன வாயுக் கசிவு மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் Compressorஇல் ஏற்படும் அதிக வெப்பம் போன்றவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், போதிய காற்றோட்டமின்றிப் பெட்டியைச் சுவருக்கு மிக அருகில் வைப்பதும் அதன் செயல்பாட்டைப் பாதிக்கலாம்.
இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்க, குளிர்சாதனப் பெட்டியைச் சுற்றிப் போதிய காற்றோட்டம் இருக்குமாறு வைப்பதுடன், மின் இணைப்புகள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்துள்ளனவா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். ஃப்ரீசரில் படியும் பனிக்கட்டிகளை அகற்றக் கத்தி போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலும், பெட்டிக்குள் அளவுக்கு அதிகமான பொருட்களை அடுக்குவதைத் தவிர்த்து, உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப முறையான பராமரிப்பை மேற்கொள்வதும் அவசியமாகும்.
குளிர்சாதனப் பெட்டியின் மின் இணைப்புப் பகுதியில் அதிக வெப்பம், எரிந்த வாசனை, வழக்கத்திற்கு மாறான சத்தம் அல்லது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சாதனத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாமல், பாதுகாப்பாக விலகி இருந்து தகுதிவாய்ந்த மின் நிபுணர் அல்லது பழுதுபார்ப்பவரின் உதவியைப் பெற வேண்டும். முறையான பராமரிப்பும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதும் எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்க உதவும்