40 Views
இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாகவும், 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகள் அடுத்தடுத்த இடங்களிலும் பதிவாகியுள்ளன. மேலும், கடல்களின் வெப்பநிலை அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் மட்டம் உயர்தல் போன்ற காலநிலை மாற்றங்களும் தீவிரமடைந்து வருவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், தற்போது தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக, 2026ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் 2027ஆம் ஆண்டு வரையிலும் கடும் வெப்பம், வறட்சி மற்றும் அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.