தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் உப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், அளவுக்கு அதிகமாக உடலில் உப்பு சேர்ந்தால் பின்வரும் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளன...
● உயர் இரத்த அழுத்தம்.
● சிறுநீரகப் பாதிப்பு.
● இதய நோய்கள்.
● உடலில் வீக்கம்.
● வயிற்றுப் புற்றுநோய் அபாயம்.
ஆகவே, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பையே உட்கொள்ள வேண்டும். அதாவது ஒரு தேக்கரண்டிக்கும் குறைவான அளவாகும்.
அதனுடன் உப்பைக் குறைப்பதற்கான வழிகள் சிலவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்...
● உணவில் சேர்க்கும் உப்பின் அளவில் கவனமாக இருத்தல்.
● ஊறுகாய் மற்றும் கருவாடு போன்ற அதிக உப்புள்ள உணவுகளைக் குறைவாக உட்கொள்ளல்.
● சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்.
● உணவில் உப்புக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு மற்றும் இயற்கையான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துதல்.