பொதுவாக சூரியனை மஞ்சள் நிறத்தில் காண்கிறோம். ஆனால், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது சூரியன் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதாக நாசா கூறுகிறது. சூரியன் பல்வேறு நிறங்களைக் கொண்ட ஒளியை வெளியிடுகிறது. அவை ஒன்றிணையும்போது வெள்ளை ஒளியாகத் தோன்றுகின்றன.
பூமியில் சூரியன் மஞ்சள் நிறத்தில் தெரிவதற்குக் காரணம் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிச் சிதறலாகும். சூரிய ஒளியில் உள்ள நீல நிறம் காற்று மூலக்கூறுகளால் அதிகமாகச் சிதறடிக்கப்படுவதால், சூரியன் மஞ்சள் நிறத்தில் தெரிவதுடன் வானமும் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.
அதேபோல், சூரிய உதயம் மற்றும் மறையும் நேரங்களில் ஒளி வளிமண்டலத்தின் வழியாக நீண்ட தூரம் பயணிப்பதால், சூரியன் சிவப்பு அல்லது செம்மஞ்சள் நிறத்தில் தோன்றுகிறது. இதனால் சூரியனின் நிறம் மாறுவது அதன் இயல்பால் அல்ல; பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தாலேயே என அறிவியல் விளக்குகிறது.