இனி வரும் காலங்களில் AI மக்களின் வாழ்க்கை முறையினை மாற்றக்கூடும் என்று பலராலும் கூறப்பட்டுவரும் நிலையில், AIயை வைத்து உற்பத்தி திறனை அதிகரிக்கும் காரணத்தால் வரும் காலங்களில் சிலர் வாரத்தில் மூன்று நாள் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை பராமரிக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம்.
AI தொழில்நுட்பமானது வேலைகளை வேகமாகவும் திறமையாகவும் செய்து முடிக்க உதவும் என்பதோடு மட்டும் அல்லாமல் இதன் மூலம் சில குடும்பங்களில் இருவர் சேர்ந்து வேலைக்கு செல்ல வேண்டிய தேவை குறையலாம் என்றும், ஒருவரின் வருமானத்திலேயே குடும்பத்தை நன்கு நடத்தும் சூழல் உருவாகலாம் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
AIஇன் இந்த தீவிர வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அதே தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தித்திறன் உயர்வதோடு , மக்கள் குறைவான நேரத்தில் வேலையை செய்து முடிக்கும் வாய்ப்பும் உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.