தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் -1
Dark அல்லது Milk Chocolate -1
நறுக்கிய Almonds / Peanuts -2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் அல்லது Sprinkles - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி, சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். Chocolateஐ ஒரு பாத்திரத்தில் வைத்து மெதுவாக உருக்கவும். பின்னர் ஒவ்வொரு வாழைப்பழத் துண்டையும் உருக்கிய Chocolateஇல் நன்றாக இட்டு மேலே நறுக்கிய Nuts அல்லது தேங்காய் துருவலை தூவவும்.
தயார் செய்த துண்டுகளை 2–3 நிமிடங்கள் குளிரூட்டியில் வைத்தால் Chocolate சற்று உறைந்து, சாப்பிடுவதற்கு தயாராகிவிடும். அதிக இனிப்பு வேண்டாம் என்றால் Dark Chocolate பயன்படுத்தலாம் .