இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான மார்க் வூட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் .
மார்க் வூட் (36 வயது) இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 150 கிலோமீற்றர் வேகத்துக்கும் அதிகமாக பந்தினை வீசும் திறனை வைத்திருந்ததுடன், இங்கிலாந்து அணியின் பல முக்கிய வெற்றிகளிலும் பங்காற்றியிருந்தார்.
மார்க் வூட் 38 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளையும், 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும்,38 T20I போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.