கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 1974ஆம் ஆண்டு வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாணம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் மூலம் தமிழில் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், இயக்குநர் 'பவன் வடேயார்' இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெயில்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கேவின் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம், சாய் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பெயில்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ‘பெயில்’ திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.