Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
பாகிஸ்தானிடம் தோல்வி! தலைவர் திலக் வர்மாவின் கருத்தால் சர்ச்சை!

SOORIYAN GOSSIP - பாகிஸ்தானிடம் தோல்வி! தலைவர் திலக் வர்மாவின் கருத்தால் சர்ச்சை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண Rising Stars 2026 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் ‘A’ அணியிடம் இந்தியா ‘A’’ அணி 48 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 313 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 314 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.


இந்திய அணியின் தலைவர் திலக் வர்மா தனிப்பட்ட முறையில் சிறப்பாகப் போராடி 149 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றார். ஷாபாஸ் அகமது 41 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்று அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினார். இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்ட போதிலும், இந்த இணைப்பாட்டால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த திலக் வர்மா, முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். ஷாபாஸ் அகமது மேலும் இரண்டு ஓவர்கள் களத்தில் நின்றிருந்தால் போட்டியை வெற்றிகரமாக முடித்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், திலக் வர்மாவின் துடுப்பாட்ட வேகம் மற்றும் சக வீரர்கள் குறித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா ‘A’’ அணி தனது அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை நவம்பர் 24ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top