சென்னையில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் எல்.கே. சுதீஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் நடிகை தேவயானி, தனது இரு மகள்களுடன் கலந்துகொண்டார். மணமக்களை வாழ்த்துவதற்காக மேடைக்குச் சென்றிருந்தபோது, தமிழக எதிர்கட்சி தலைவரும் அங்கே வந்திருந்தார்.
அப்போது சிலர் அவரை ஓரமாக நிற்குமாறு கூறியதாகவும், கூட்ட நெரிசலில் இருந்து வெளியேற முடியாமல் நின்ற தேவயானி உதயநிதி ஸ்டாலின் மீது தன் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் பின் உதயநிதி, தேவயானியிடம் சைகயால் தன் தொண்டர்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் தேவயானி கோபமாக அவ்விடத்திலிருந்து தன் மகள்களுடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .