பிரபல தகவல் பரிமாற்றச் செயலியான WhatsApp தனது Group Chat வசதியில் முக்கிய மாற்றத்தை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
அதன்படி WhatsApp, குழுக்களில் இணைக்கக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,024 இலிருந்து 1,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் ஒரே குழுவில் மேலும் 476 பேரை இணைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அதிகமானோருடன் ஒரே குழுவில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
எனவே, புதிய வசதி குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.