பிரபல தகவல் பரிமாற்றச் செயலியான WhatsApp, குழு உரையாடல்களை எளிதாக்கும் வகையில் நான்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, முக்கியமான செய்திகளை காலவரையறையின்றிப் பின் செய்து வைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
மேலும், குழுவில் புதிதாக இணைந்தவர்களுக்குப் பழைய உரையாடல்களைப் பகிரும் வசதியும், குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டும் தெரியும் வகையில் நிலைத்தகவல்களைப் பகிரும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன், தங்களைக் குறிப்பிட்ட செய்திகள் மற்றும் பதில்களை எளிதாகக் கண்டறியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய அம்சங்கள் படிப்படியாகப் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன.