Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) Model ஆன Gemini 4 Carbon ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய Gemini 4 Argon Model ஐ விட பல மடங்கு வேகமாகச் செயற்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிதல், தொழில்நுட்பப் பிழைகளின் மூல காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்தல் போன்ற பணிகளில் Gemini 4 Carbon சிறப்பாகச் செயல்படுகிறது.
AI பகுப்பாய்வு சோதனையில் 59 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்பு வெளியான Gemini 4 Argon Model 50 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது.
பயனர்களின் கருத்துகளைச் சேகரித்து, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய பின்னர் இந்த AI Model ஐ வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது.