அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (AI) என்ற சொல்லுக்குப் பதிலாக, ‘Super Intelligence’ (SI) என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். AI என்ற சொல் தொழில்நுட்பத்தின் உண்மையான திறனை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் தகவல்களில் AI என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, SI என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கான உத்தரவை ஏற்கெனவே பிறப்பித்துள்ளார்.
எனினும், ‘Super Intelligence’ என்பது மனிதர்களின் அறிவாற்றலை விஞ்சும் தொழில்நுட்பத்தைக் குறிக்கும் என்பதால், இந்தப் பெயர் மாற்றம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன.