இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி நாளை (30) நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை தடுத்து சொந்த மண்ணில் வெற்றிபெற நியூசிலாந்து அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி நாளை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.