தற்போது இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ,இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தொடர்ந்து மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாக, பாகிஸ்தான் அணியிலிருந்து அதன் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் சயீம் அய்யூப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இடதுகைதுடுப்பாட்ட வீரரான இவர், இந்த தொடரில் விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் முறையே 6, 8 மற்றும் 7 ஓட்டங்களை எடுத்து ஏமாற்றமளித்தார்.
அதேவேளை சயீம் அய்யூபின் பிரதியீடாக மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சஹிப்சடா பர்ஹான் பாகிஸ்தான் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் இந்த முத்தரப்பு தொடரில் தனது முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.