நியூஸிலாந்து இன்று இந்தியாவுடன் 5 T20 ஆட்டங்களுக்கான முதலாவது போட்டியை எதிர்கொண்டது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு சாதனையை படைத்துள்ளது.
சொந்த மண்ணில் 700 வது சர்வதேச போட்டியில் விளையாடும் நான்காவது அணி என்கின்ற பெருமையை நியூஸிலாந்து அணி பெற்றது.இந்த வரிசையில் இங்கிலாந்து அணி 998 போட்டிகளுடன் முதல் இடத்தில உள்ளதுடன் 995 போட்டிகளுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் 807 போட்டிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.