நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்திருந்தது.
இருப்பினும் குறித்த போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீர சாதனையொன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளார். சர்வதேச T20 போட்டிகளில் தனது 100ஆவது விக்கெட்டை நேற்றைய போட்டியின் போது அவர் வீழ்த்தியிருந்தார்.
இலங்கை அணி சார்பில் சர்வதேச T20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தும் மூன்றாவது வீரராக துஷ்மந்த சமீர இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே லசித் மலிங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.