\\\'பிரேமலு\\\' திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய இரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த \\\'டியூட்\\\' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளுக்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி திரைப்படங்களில் நடிக்க மமிதா பைஜுவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியான \\\'ஜனநாயகன்\\\', \\\'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்\\\', \\\'பெத்லேகேம் குடும்ப யூனிட்\\\' ஆகிய மூன்று திரைப்படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. இது மமிதா பைஜுவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்த புதிய திரைப்படத்திற்கு ‘ஹலோ டியர்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘ஹலோ டியர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் டினாய் பாலோஸ் இயக்குகிறார். இவர் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ திரைப்படத்தின் இணை எழுத்தாளர்களில் ஒருவராவார். ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 20ஆவது தயாரிப்பாக இத்திரைப்படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். நவீன மாநகரப் பின்னணியில் உருவாகும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக ‘ஹலோ டியர்’ உருவாகி வருகிறது.
இந்நிலையில், ‘ஹலோ டியர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.