Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
குளிர்சாதனப் பெட்டியின் பின்னால் உள்ள கறுப்பு வலை எதற்காகத் தெரியுமா?

SOORIYANFM GOSSIP - குளிர்சாதனப் பெட்டியின் பின்னால் உள்ள கறுப்பு வலை எதற்காகத் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

97 Views
நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தில் காணப்படும் கறுப்பு நிறக் கம்பி அமைப்பு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கும். எனினும், அதன் உண்மையான பயன்பாடு குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. சிலர் இதனை உட்புறப் பாகங்களைப் பாதுகாக்கும் அமைப்பு எனக் கருதுகின்றனர். ஆனால், இது வெப்பத்தை வெளியேற்றும் முக்கியமான பகுதியாகும். குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தில் காணப்படும் வெப்பத்தை வெளியேற்றுவதன் மூலம், அதிலுள்ள உணவுப் பொருட்கள் குளிர்ச்சியாகப் பாதுகாக்கப்படுவதற்கு இந்த அமைப்பு உதவுகின்றது.

 

குளிர்சாதனப் பெட்டி உட்புறத்தில் குளிரை நேரடியாக உருவாக்குவதற்குப் பதிலாக, அங்குள்ள வெப்பத்தை உறிஞ்சி வெளியேற்றும் முறையில் செயற்படுகின்றது. மேலும் உட்புறத்திலிருந்து வெப்பத்தை உறிஞ்சிய பின்னர், பின்புறக் கம்பிகள் வழியாகச் சென்று அந்த வெப்பத்தை வெளிப்புறக் காற்றில் வெளியேற்றுகின்றது. பின்னர், குளிரூட்டியானது மீண்டும் சுழற்சியில் ஈடுபட்டு உட்புற வெப்பநிலையைக் குறைவாகப் பேண உதவுகின்றது. இந்தச் செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெறுவதன் மூலமே உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் பழுதடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

இந்நிலையில், குளிர்சாதனப்பெட்டியின் பின்புறக் கம்பிகளில் அதிகளவு தூசுகள் படிவதும், குளிர்சாதனப் பெட்டியைச் சுவருடன் மிகவும் நெருக்கமாக வைப்பதும் வெப்பம் வெளியேறுவதைப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அதன் செயல்திறன் குறைவதுடன், மின்சாரப் பயன்பாடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தை அவ்வப்போது சுத்தம் செய்வதுடன், சுவருக்கும் குளிர்சாதன பெட்டிக்கும் இடையில் உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் அளவில் இடைவெளியைப் பேணுவதும் அவசியமாகும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top