தொலைபேசி அதிகமாக சூடாகும்போது, அதன் கவருக்குள் அல்லது அருகில் வெங்காயம் வைத்தால் வெப்பம் குறையும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்தக் கூற்றுக்கு அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெங்காயத்தில் நீர்ச்சத்து இருந்தாலும், அது தொலைபேசியின் வெப்பத்தை உறிஞ்சி குளிர்விக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததல்ல. தொலைபேசியின் செயலி, மின்கலம் உள்ளிட்ட உள்ளகப் பாகங்கள் இயங்கும்போது உருவாகும் வெப்பமே அதன் சூட்டுக்குக் காரணமாகும்.
எனவே, தொலைபேசி அதிகமாக சூடானால் தேவையற்ற செயலிகளை மூடுவதும், நீண்ட நேரம் விளையாடுதல் அல்லது காணொளி பார்ப்பதைத் தவிர்ப்பதும் உதவும்.