அன்றாடம் நாம் உண்ணும் உணவில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
ஒவ்வொரு நிறத்திலுள்ள உணவுகளிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. அவ்வாறான சில உணவுகளையும் அவை தரும் பலன்களைப் பற்றியும் பார்க்கலாம்...
● சிவப்பு நிறத்திலுள்ள தக்காளி, தர்பூசணி, Strawberry போன்றவை எமது உடலிலுள்ள செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
● செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறங்களிலுள்ள கரட், மாம்பழம், தோடை போன்றவற்றில் Vitamin C உள்ளதால்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
● பச்சை நிறத்திலுள்ள கீரை, வெள்ளரிக்காய், கோவா போன்றவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.
● ஊதா நிறத்திலுள்ள திராட்சை, கத்தரிக்காய், பீட்ரூட் போன்றவை செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன.
● வெள்ளை நிறத்திலுள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவை ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு உதவுகின்றன.
எனவே, ஒரே வகையான பழங்கள் அல்லது காய்கறிகளை மட்டும் சாப்பிடாமல், பல்வேறு நிறங்களிலுள்ள உணவுகளைத் தினமும் உண்டோமேயானால் உடலுக்குப் பல வகையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.