Instagram பயனர்களைக் கவரும் வகையில், 90 நிமிடங்கள் வரை நீளமான வீடியோக்களைப் பதிவேற்றும் புதிய வசதியை Meta நிறுவனம் சோதித்து வருகிறது. ‘Features’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வசதி, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்பாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் Podcast, நேர்காணல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நீண்ட நேரக் காணொளிகளை அகலத்திரை வடிவிலும் பகிர முடியும். மேலும், குறுகிய Reels காணொளிகள் மூலம் முழுமையான நீண்ட காணொளிகளையும் பார்வையாளர்கள் எளிதில் அணுகும் வகையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த வசதி, அனைத்து பயனர்களுக்கும் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த மாற்றத்தின் மூலம் நீண்ட நேரக் காணொளிகளை விரும்பிப் பார்ப்பவர்களையும் Instagram தளத்தின் பக்கம் ஈர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.