சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒழுங்கு செய்துள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. இன் வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கான T20 கிரிக்கெட் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 14 பேர் அடங்கிய இலங்கை மகளிர் குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இலங்கை அணியினை முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனையான ஹர்சிதா சமரவிக்ரம வழிநடாத்த, கவீஷா டில்ஹாரி பிரதி தலைவியாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கை இந்த தொடரின் முதல் போட்டியில் நவம்பர் 12ஆம் திகதி அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியினை எதிர்கொள்கின்றது.