முக அழகை மேம்படுத்தப் பயன்படுத்தும் ஒப்பனைக் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஒப்பனைத் தூரிகைகள் மற்றும் அழகுக் கடற்பஞ்சுகளில் ஒப்பனைப் பொருட்களின் எச்சங்கள், எண்ணெய் மற்றும் அழுக்குகள் படியக்கூடும்.
ஆகவே இவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது சரும எரிச்சல் மற்றும் பருக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
அத்தோடு ஒப்பனைத் தூரிகைகளைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதுடன், அவற்றைச் சருமத்திற்கு ஏற்ற மென்மையான சுத்திகரிப்புப் பொருளைக் கொண்டு முறையாகக் கழுவ வேண்டும்.
குறிப்பாக, பலருடன் ஒப்பனைக் கருவிகளைப் பகிர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
மேலும், ஈரமான ஒப்பனைக் கருவிகளை மூடிய இடங்களில் வைத்திருப்பதைத் தவிர்த்து, காற்றோட்டமான இடத்தில் முழுமையாக உலர்த்திய பின்னர் சேமிக்க வேண்டும்.