முகப்பரு, வெயில் காயம், தீப்புண், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை இளமையாகவும் ஈரப்பதத்துடனும் வைக்க கற்றாழை உதவுகிறது.
கற்றாழை சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், முடி உதிர்வு குறைந்து பொடுகுத் தொல்லை நீங்கும்.
கற்றாழை சாறு உடல் சூட்டைக் குறைத்து, சிறுநீர் தாரை எரிச்சல் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது.
கற்றாழை சாறு குடலைச் சுத்தம் செய்து மலச்சிக்கலைப் போக்குகிறது.
மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளுக்குச் சிறந்த மருந்தாக கற்றாழை பயன்படுகிறது.