இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசத் தொடரானது கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் இந்தத் தொடரில் பல்வேறு சாதனைகளை இலங்கை அணி நிகழ்த்தி வருகிறது. பலத்த போட்டிக்கு மத்தியில் இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான அணிகள் தகுதி பெற்றுள்ளன.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளில் யார் கிண்ணத்தை இன்றைய தினம் வெல்லவிருக்கிறார்கள் என்பதை எதிர்பார்த்து இரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது ஆரம்பமாகியுள்ள இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டுள்ளது.