நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டித் தொடரிலும் விளையாட உள்ளது.
முதல் போட்டி வரும் நவம்பர் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர் விராட் கோலி, நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.
ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விராட் கோலியும் ,ரோஹித் ஷர்மாவும் விளையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தொடர் பெரியளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.