சரும வறட்சி பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு தேன் ஒரு இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருளாகப் பயன்படுகிறது.
தேனில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் தன்மை சருமம் வறண்டு போவதைக் குறைக்க உதவுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் காணப்படும் .
பயன்படுத்தும் முறை:
ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் மெதுவாகத் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவலாம். தொடர்ந்து சருமத்திற்கு ஏற்ற moisturizer பயன்படுத்துவது நல்லது.
கவனிக்க வேண்டியவை:
தேன் பயன்படுத்துவதற்கு முன்பு கையின் சிறிய பகுதியில் தடவி ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உணர்திறன் அதிகமுள்ள சருமம் கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.