அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் Shaun Marsh இந்த ஆண்டு நடைபெறவுள்ள இத்தாலிய T10 லீக் தொடரில் ஆடுவதற்கு Milan Icons அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த இடது கை துடுப்பாட்ட வீரரான Shaun Marsh தனது துடுப்பாட்டத் திறமையால் அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. வெளிநாட்டு நட்சத்திர வீரர்களுடன் இத்தாலி வீரர்களும் இணைந்து விளையாட உள்ளனர்.இத்தாலியில் கிரிக்கெட்டை வளர்ப்பது, இளம் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் வழங்குவது ஆகியவை இந்தத் தொடரின் முக்கிய நோக்கங்களாகும்.