41 Views
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Shreyas Iyer தலைமையிலான அணியில், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா உள்ளிட்ட அதிரடி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். துணைத் தலைவராக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா–நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் புவனேஸ்வர் குமாரின் நீண்ட இடைவெளிக்குப் பிறகான விளையாட்டு எவ்வாறு அமையப்போகிறது என்பது இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.