Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
சித்தார்த்–கியாரா தம்பதிக்கு மீண்டும் Good News!

SOORIYAN GOSSIP - சித்தார்த்–கியாரா தம்பதிக்கு மீண்டும் Good News!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views

பொலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடியான சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி தம்பதியினர் மீண்டும் பெற்றோராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருவரும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவில், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


 

தங்களது முதல் குழந்தையான சாராயாவின் சிறிய கையை காட்டும் புகைப்படத்தையும், அதனுடன் குழந்தைக்கான சிறிய காலணிகளையும் பகிர்ந்துள்ளனர். “மீண்டும் ஒரு முறை மிகப்பெரிய பரிசால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்; எங்கள் இதயம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்துள்ளது” என்ற உணர்வுபூர்வமான பதிவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சித்தார்த் மற்றும் கியாரா கடந்த 2023ஆம் ஆண்டு ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து நடித்த 'ஷெர்ஷாஹ்' திரைப்படத்தின் போது இவர்களுக்கிடையிலான காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சாராயா மல்ஹோத்ரா என பெயரிட்டனர். தற்போது முதல் குழந்தை பிறந்து சுமார் ஒரு வருடத்திற்குள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக தம்பதி அறிவித்திருப்பது இரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் மகிழ்ச்சியான அறிவிப்புக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு குழந்தையின் பெற்றோராக தங்களது புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வரும் சித்தார்த்–கியாரா தம்பதிக்கு, தற்போது மற்றுமொரு குழந்தை வரவிருப்பது அவர்களது குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top