மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'Avengers: EndGame' திரைப்படத்தில் மேலதிகமாக 4 நிமிடக் காட்சிகள் சேர்க்கப்பட்டு 'Avengers: EndGame Encore' என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகியிருந்தது.
இரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இத் திரைப்படங்கள் $2.9255 பில்லியன் வசூலைப் பெற்றதன் மூலம் இதுவரை உலகளவில் வசூலில் முதலிடத்தில் இருந்த 'அவதார்' திரைப்படத்தின் வசூலை முறியடித்துள்ளன.
2009ஆம் ஆண்டு வெளியான 'அவதார்' திரைப்படம் $2.9237 பில்லியன் வசூலை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.