இதுவரை ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்களில் அதிகமான திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவரான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டத் திரைப்படமான 'The Odyssey' உலகளவில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
அந்த வகையில், IMAX திரையரங்குகளில் மட்டும் $500 மில்லியன் வசூலைக் குவித்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது நோலனின் 'The Odyssey' திரைப்படம்.
இந்த வரிசையில் இயக்குநர் James Cameronஇன் Avatar($271M) இரண்டாவது இடத்திலும், Avatar: The Way Of Water($259M) மூன்றாவது இடத்திலும் உள்ளன.