27 Views
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார் பந்தய தளத்தில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் கலந்து கொண்டார். நடிகர் அஜித்குமார் பங்கேற்ற பந்தயத்தை விஜய் ஆரம்பித்து வைத்ததுடன், அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்த காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பந்தய நிகழ்வின்போது விஜய் மற்றும் அஜித் இருவரும் நட்புடன் உரையாடியதுடன், இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு தருணங்கள் இடம்பெற்றன. இருவரும் பரஸ்பரம் பரிசுகளையும் வழங்கிக்கொண்டனர். விஜய், அஜித்துக்கு சிறிய ரேஸ் கார் மாதிரியை பரிசாக வழங்கிய நிலையில், அஜித் கையெழுத்திட்ட தலைக்கவசத்தை விஜய்க்கு வழங்கினார்.
இந்த சந்திப்பு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதுடன், இரு நடிகர்களின் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட காலமாக இரசிகர்களிடையே காணப்பட்ட போட்டி மனப்பான்மைக்கு மாறாக, விஜய்–அஜித் நட்பை வெளிப்படுத்தும் இந்தக் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.