பீட்ரூட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. பீட்ரூட்டில் இயற்கையாகவே நைட்ரேட்டுகள் அதிகமாக காணப்படுவதால் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இருந்தாலும் பீட்ரூட் அனைவருக்கும் ஒரே அளவான தீர்வை கொடுக்குமா என்பது சற்று கேள்விக்குறிதான்.
வயது,உணவு பழக்கம் காரணமாக வேறுபடலாம். பீட்ரூட்டை அவியல் மற்றும் சலட் செய்து அளவோடு சாப்பிடுவதால் சிறந்த பலனை பெறலாம். உடல்நல பிரச்சினைகள் இருந்தால் வைத்தியரின் ஆலோசனையுடன் பீட்ரூட்டை சாப்பிடுவது சிறந்தது.