இரவில் சாப்பிடுவதால் என்ன பயன்?
வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும். அதே நேரத்தில், குறைந்த கலோரி கொண்டது என்பதால் இரவில் அதிக கலோரி கொண்ட Snacksக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளலாம்.
இரவில் வெள்ளரிக்காயை தனியாகவோ அல்லது சலாதாகவோ சாப்பிடலாம். தக்காளி, கரட் போன்ற காய்கறிகளுடன் சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம். அதிக உப்பு, காரமான சோஸ் போன்றவற்றை சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு வெள்ளரிக்காய் சாப்பிட்ட பிறகு சமிபாட்டுக் கோளாறு அல்லது வயிற்று அசௌகரியம் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் இரவில் அதிக அளவில் சாப்பிடாமல், தங்களுக்கு ஏற்ற அளவைத் தேர்வு செய்வது நல்லது. மேலும், அதிக நீர்ச்சத்து காரணமாக தூங்கும் நேரத்திற்கு அருகில் அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொண்டால், அளவோடு இரவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.