பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரானது இங்கிலாந்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. குறித்த தொடரில் நோர்வே நாட்டின் கால்பந்து நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் Manchester City அணிக்காக விளையாடி வருகிறார்.
Coventry City அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் Manchester City அணிக்காக 26ஆவது நிமிடத்தில் ஹாலண்ட் அடித்த கோலானது கிளப் கால்பந்துப் போட்டிகளில் அவரது 300ஆவது கோலாகும். இந்த கோலுடன் சேர்த்து மொத்தமாக Manchester City அணிக்காக ஹாலண்ட் 165 கோல்களை அடித்துள்ளார்.
25 வயது நிரம்பிய எர்லிங் ஹாலண்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் பிரீமியர் லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் Manchester City அணியானது தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளது.