Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
திரைத்துறையில் இயக்குநராக 20 ஆண்டுகள் நிறைவு - வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு

SOORIYAN GOSSIP - திரைத்துறையில் இயக்குநராக 20 ஆண்டுகள் நிறைவு - வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views
இயக்குநர் வெங்கட் பிரபு ‘சென்னை 28’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்தார். இவரது முதல் திரைப்படமான ‘சென்னை 28’ 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குநராக தனது 20 ஆவது ஆண்டில் வெங்கட் பிரபு அடியெடுத்து வைக்கிறார். தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது ''இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ‘சென்னை 28’ இல் ஒரு இயக்குநராக என் பயணம் தொடங்கியது. அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய எஸ்பிபி சார் அவர்களின் ஆசிகளாலும் சகோதரர் சரண் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும் மட்டுமே இது சாத்தியமானது அந்த ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. இன்று. என் திரைப்பயணத்தின் 20ஆவது ஆண்டில் நுழையும் இந்த வேளையில் மறக்கமுடியாத நினைவுகளாலும் எதிர்காலம் குறித்த பேரார்வத்தாலும் என் மனம் நிரம்பி இருக்கிறது.

தொடர்ந்து புதிய முயற்சிகளை செய்வதற்கான தைரியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது காட்டி வரும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும்தான் காரணம். என் வெற்றிகளைக் கொண்டாடி இருக்கிறீர்கள். கடினமான கட்டங்களில் என் பக்கபலமாக நின்று இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய படத்தோடு நான் வரும்போது அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள்.உங்களுடைய இந்த நம்பிக்கைதான் எனக்குத் தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுக்கும் துணிச்சலைக் கொடுக்கிறது. அதற்கு நாள் எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது பின்னோக்கிப் பார்க்கையில் என் மனதிற்குள் நன்றியுணர்வு மட்டுமே நிரம்பி இருக்கிறது!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதே தீவிரமான ஆர்வத்தோடு உங்களுக்கு நல்ல கதைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் ஒன்றாக பயணிப்போம். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.''

தனது வழக்கமான பாணியில் புதிய முயற்சிகளுடன் பயணத்தைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெங்கட் பிரபுவின் இந்த பதிவிற்கு திரையுலகினரும் இரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top