Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
'அமரன்' திரைப்படத்திற்காக 3-வது தேசிய விருது: "விருது இரசிகர்களுக்கு சமர்ப்பணம்" - ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

SOORIYAN GOSSIP - 'அமரன்' திரைப்படத்திற்காக 3-வது தேசிய விருது: "விருது இரசிகர்களுக்கு சமர்ப்பணம்" - ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
டெல்லியில் அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் 3 பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்புடன் சேர்த்து, திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 'சூரரைப் போற்று' மற்றும் 'வாத்தி' ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளை வென்ற ஜி.வி. பிரகாஷ், தற்போது 'அமரன்' திரைப்படம் மூலம் தனது 3-வது தேசிய விருதை வென்றுள்ளார்.


விருது வென்ற மகிழ்ச்சியில் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ், 'மூன்றாவது முறையாக இந்த உயரிய விருதைப் பெறுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கமல்ஹாசன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத அன்பே எனது பலம். நான் உருவாக்கும் ஒவ்வொரு இசையும் உங்களுக்கானதுதான். இந்த விருது எனக்கு மட்டுமல்ல, என் இரசிகர்களாகிய உங்களுக்கும் சொந்தமானது' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top