இத்திரைப்படத்தின் Promotion நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது சினிமா வட்டாரத்திலும் இணையத்திலும் பெரிதும் வைரலாகி வருகின்றன.
நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய்யிடம், “தந்தையிடம் நீங்கள் கற்றுக்கொண்ட மிகச் சிறந்த குணம் என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “நேரம் தவறாமைதான் அப்பாவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்” என்று கூறி, அதனைத் தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது தந்தை முதலமைச்சரானதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் இருப்பதாகவும், தனக்காக அவர் மிகப்பெரிய இரசிகர் பட்டாளத்தை வழங்கிச் சென்றுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேலும், தான் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தைப் பார்க்கத் தனது தந்தை மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் வேளையில், ஜேசன் சஞ்சயின் இந்த பதில்கள் சமூக வலைதளங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.