கற்பூரவள்ளி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம், மற்றும் உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக இடித்து அதன் சாற்றை எடுத்து சற்று மிளகுத்தூளுடன்,எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்து குடித்து வர சளி உடனடியாக வெளியேறி இருமல் குறைவடையும்.
கருமிளகுப் பொடி செய்து சிறிது தேனுடன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர இருமல் குறையும்.
தூய்மையான துளசி இலைகளை நன்றாக மென்று அதன் சாற்றை விழுங்கலாம் பார்த்துக் கொண்டால் இது தொண்டையில் உள்ள கிருமித் தொற்றுகளை நீக்கி சளியைக் கட்டுப்படுத்தும்.