இரவு நேரத்தில் சருமப் பராமரிப்புக்காக பலர் Night Cream பயன்படுத்துகின்றனர். ஆனால், அனைத்து Night Creamகளும் எல்லா சருமத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. சருமத்தின் தன்மை மற்றும் creamகளில் உள்ளடக்கங்களை பொறுத்து சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதிகமாக எண்ணெய் தன்மை கொண்ட அல்லது முகத்தில் உள்ள துளைகளை அடைக்கக்கூடிய creamகளை பயன்படுத்தும்போது சிலருக்கு முகப்பரு மற்றும் சிறிய கொப்பளங்கள் ஏற்படலாம்.
அதேபோல், fragrance அல்லது குறிப்பிட்ட உள்ளடக்கப்பட்ட பொருட்கள் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பு, சிவத்தல், எரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், retinol அல்லது சில active ingredients உள்ள Night Creamகளை பயன்படுத்தும்போது ஆரம்பத்தில் சரும வறட்சி, peeling அல்லது சருமம் கடினமாக மாறும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். எனவே Night Cream தேர்வு செய்யும்போது உங்கள் சருமத்திற்கு ஏற்ற உற்பத்திகளை தேர்வு செய்து, புதிய creamஐ முதலில் சிறிய பகுதியில் பயன்படுத்திப் பார்ப்பது நல்லது.