இலங்கை 17 வயதுக்குட்பட்ட ஆடவர் கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் 17 வயதுக்குட்பட்ட ஆடவர் அணிக்கு எதிராக ஒரு மூன்று நாட்கள் கொண்ட போட்டி ஒன்றிலும், ஐந்து ஒருநாள் போட்டி தொடரிலும் விளையாடவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கிப் புறப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.