துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கிண்ண T20 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இதேவேளை போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆசிய கிரிக்கட் பேரவை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நக்வியிடமிருந்து கிண்ணத்தை பெற முடியாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் "இது BCCI எடுத்த கொள்கை முடிவு. நாங்கள் எங்கள் கிரிக்கெட் சபையின் முடிவிற்குத் துணை நிற்கிறோம்." எனக் கூறியுள்ளார்.