47 Views
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வெளியாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 24 நாட்களிலேயே உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 300 கோடி வசூல் செய்த இரண்டாவது மலையாள திரைப்படம் என்ற பெருமையை ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, மலையாள சினிமாவில் மிக வேகமாக இந்திய மதிப்பில் 300 கோடி ரூபா வசூலை கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் இது பதிவு செய்துள்ளது.
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் வெற்றியால் நிவின் பாலியின் இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திரையரங்குகளில் தொடர்ந்து இரசிகர்களை ஈர்த்து வரும் இப்படம், மலையாள சினிமாவின் வசூல் சாதனை பட்டியலிலும் புதிய இடத்தை பிடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது