47 வயதில் சாதனை!
SooriyanFM Gossip - 47 வயதில் சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரசிகர்களால் அழைக்கப்படும் தென்னாபிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் தாஹிர், மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்று வரும் 'கரீபியன் பிரிமியர் லீக்' தொடரில் Gayana Amazon Warriors அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
குறித்த தொடரில் St Lucia Kings அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியின் போது அபாரமாகப் பந்து வீசிய 47 வயதான இம்ரான் தாஹிர், 4 ஓவர்களில் வெறும் 17 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இம்ரான் தாஹிர்.